மலேசியாவைத் தாயகமாகக் கொண்டு அனைத்துலக அளவில் பட்டியலிடப்பட்ட இரண்டு பெரும் நிறுவனங்கள், உலகளாவிய, ஆரோக்கியம், முதுமை எதிர்ப்பு, நல்வாழ்வுத் துறைகளில் புரட்சியைக் கைகோத்துள்ளன. ஹோலிஸ்டா கோல்டெக் லிமிடெட், சுவாங் சாய் சுவான் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், ஓவிகோல் பிடிஒய் லிமிடெட் மூலமாக 50:50 என்ற விகிதத்தில் ஒரு மூலோபாயக் கூட்டு முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இது பிராந்திய வெற்றியில் இருந்து உலகளாவிய ஆதிக்கத்தை எதிர்நோக்கிய அவர்களின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று மலேசியாவின் ஹோலிஸ்டா நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ டாக்டர் ராஜன் மாணிக்கம் கூறினார். இந்தக் கூட்டாண்மை, மேற்கு ஆஸ்திரேலியாவின் கோலி பகுதியில் நவீன ஆட்டு நானோ கொலாஜன் உற்பத்தி நிலையத்தை அமைப்பதில் தில் கவனம் கவனம் செலுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் பட்டியலிடப்பட்ட ஹோலிஸ்டா கோல்டெக்கின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்டது.
சுவாங் சாய் சுவானின் வலுவான மூலதனம், விநியோக வலையமைப்பையும் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது என அவர் தெரிவித்தார். இந்த மூலோபய சிறப்பம்சங்கள் ஆடுகளிலிருந்து பெறப்படும் கொலாஜன் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் நடுநிலையானது. இது உலகளாவியச் சந்தைகளுக்கு ஒரு சிறந்த “ஹலால்” மாற்றாக அமைகிறது. உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பாதுகாப்பு-உலகின் ஒரே நோயற்ற ஆடுகளின் ஆஸ்திரேலியாவில் ‘ஸ்கிராப்பி’ நோய் அற்றவை, ‘பிஎஸ்இ’ அபாயம் மிகக் குறைவு என உலக விலங்கு சுகாதார நிறுவனம் சான்றளித்துள்ளது. 1901 முதல் ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் இந்த தனித்துவமான நோய் எதிர்ப்பு நிலையைப் பாதுகாத்து வருகின்றன என அவர் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் சொன்னார்.

இரு தரப்பினரின் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி ஓவிகோல் பிடிஒய் லிமிடெட் மூலம் அனைத்துலகச் சந்தைகளில் நுழைய இந்தக் கூட்டு முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வாடிக்கையாளர் காயங்களுக்கு மருந்திட்டு குணப்படுத்தும் துறையில் வளர்ந்து வரும் நிறுவனமான ரீஜெனரெக்ஸ் பார்மா உடன் ஹோலிஸ்டா ஏற்கெனவே, ஒரு பிணைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. ஊட்டச்சத்து மருந்து, உணவு, அழகு சாதனம், உயிரியல் மருத்துவத் தொழில்களுக்காக பிரத்தியேகமாக மேம்பட்ட நானோ-கொலாஜன் தயாரிப்புகளை உருவாக்குகிறது. இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி, செயல்பாட்டு மூலதனத்தை வழங்க எஸ்சிசி நிறுவனம் உறுதி அளித்துள்ளதாகவும் டாக்டர் ராஜன் தெரிவித்தார்.
மேலும், ஹோலிஸ்டா நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, ஆடுகளின் தோலில் இருந்து பெறப்படும் ‘கொலாஜன்’ தொடர்பான மூன்று காப்புரிமைகளை வைத்துள்ளேன். மாட்டிலிருந்து பெறப்படும் கொலாஜனை இந்துக்களும் பௌத்தர்களும் தவிர்ப்பார்கள். பன்றியிலிருந்து, பெறப்படுவதையும் இஸ்லாமியர்கள் தவிர்ப்பார்கள். ஆனால், ஆட்டு கொலாஜன் அனைவருக்கும் பொதுவானது இந்தக் கொலாஜன் தயாரிப்பு ஆஸ்திரேலியா வில் உள்ள நோய் இல்லாத ஆடுகளிலிருந்து பெறப்படுகிறது.
இதற்கான அனைத்து ஆராய்ச்சிகளும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள் ளப்பட்டன எனவும் அவர் சொன்னார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஒரு கொலாஜன் தொழிற்சாலையை அமைப்பதற்காக 5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந் தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தக் கண்டு பிடிப்பு உலகளாவிய மருத்துவ, ஆரோக்கிய சந்தையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஷான்





