துருக்கி நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசும்போதெல்லாம், பெரும்பாலும் ஆயுத தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். சமீபத்திய ஆண்டுகளில், துருக்கி தனது பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரித்து, உலக ஆயுத சந்தையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளதே அதற்கு காரணம். ஆனால் ஆயுத ஏற்றுமதி துருக்கியின் மிகப்பெரிய வருமான ஆதாரம் அல்ல. உண்மையில், சுற்றுலா மூலமே அந்நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அதோடு துருக்கியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது.


