• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஆம்பளகிட்ட பேசாதேம்மா” பெற்ற தாய்க்கு கொடூர பரிசு தந்த பானிபூரி வியாபாரி! திருப்பத்தூரில் பரபரப்பு | “Don’t Talk to Any Man!” Pani Puri Vendor Kills Mother Over Shocking Condition in Tirupattur

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ஆம்பளகிட்ட பேசாதேம்மா” பெற்ற தாய்க்கு கொடூர பரிசு தந்த பானிபூரி வியாபாரி! திருப்பத்தூரில் பரபரப்பு | “Don’t Talk to Any Man!” Pani Puri Vendor Kills Mother Over Shocking Condition in Tirupattur
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Hema Vandhana

Time
Published: Saturday, August 8, 2026, 11:46 [IST]

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கருப்பனூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. குடும்பத்தில் நடந்த ஒரு சாதாரண தகராறு, அடுத்த சில நிமிடங்களில் ஒரு பயங்கரமான கொலையில் போய் முடியும் என்று அந்தப் பகுதி மக்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பூ வியாபாரம் செய்துவந்த ஒரு தாய், பெற்ற மகனின் கரங்களாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இப்போது அந்த தாலுகாவையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. நடந்தது என்ன?

கருப்பனூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை.. சுமார் 20 வருடங்களுக்கு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாதுரை இறந்து விட்டார்.. இவரது மனைவி கஸ்தூரிக்கு இபபோது 53 வயதாகிறது..

Pani Puri Vendor Kills Mother in Tirupattur

திருப்பத்தூர் கஸ்தூரி

இதனால் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற, அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.. இந்த தம்பதிக்கு தமிழ்ச்செல்வி என்ற மகளும், சத்தியமூர்த்தி என்ற 26 வயது மகனும் உள்ளனர். இதில் தமிழ்ச்செல்விக்குத் திருமணமாகி, தர்மபுரியில் கணவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

மகன் சத்தியமூர்த்தி சென்னையில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இன்னும் திருமணமாகாத சத்தியமூர்த்தி, விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்கு வந்து, தன்னுடைய அம்மாவை பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.

யாரிடமும் பேசக்கூடாது

ஆனால், ஊருக்கு வரும்போதெல்லாம் சத்தியமூர்த்தி கஸ்தூரியிடம், “நீ யாரிடமும் பேசக்கூடாது… நம்முடைய வீட்டிற்குள் யாரையும் வரவழைக்கக் கூடாது…” என்றெல்லாம் கண்டிஷன் போடுவாராம்..

அதற்கு கஸ்தூரி, பூ வியாபாரம் செய்யும்போது, நாலு பேரிடம் பேசாமல் எப்படி தொழில் செய்ய முடியும்? மனிதர்களோடு பழகாமல் எப்படி வாழ முடியும்? என்றெல்லாம் மகனிடம் கேட்டுள்ளார்.. ஆனால், எதையும் காதில் வாங்காத சத்தியமூர்த்தி, தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்..

ரூ.40 லட்சம் வருமானம்.. தமிழக பானிபூரி வியாபாரி கனவுல கூட நினைக்காத சம்பவம்.. ஜிஎஸ்டி நோட்டீஸ்

ரூ.40 லட்சம் வருமானம்.. தமிழக பானிபூரி வியாபாரி கனவுல கூட நினைக்காத சம்பவம்.. ஜிஎஸ்டி நோட்டீஸ்

கஸ்தூரியின் கள்ளக்காதல்

மகன் இப்படி தகராறு செய்யக்காரணம், கஸ்தூரிக்கும் வேறொரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. இந்த உறவுகுறித்து கஸ்தூரியின் மகனுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தாயார் கஸ்தூரியை சத்தியமூர்த்தி பலமுறை அவரது மகன் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் அந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தாராம். இதுதான் மகனுக்கு எரிச்சலை தந்துள்ளது.

அப்படித்தான் வழக்கம்போல 2 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஊருக்கு வந்துள்ளார் சத்தியமூர்த்தி.. வழக்கம்போல் தாய் கஸ்தூரிக்கும், மகனுக்கும் இடையே இரவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. “யாரையும் வீட்டுக்கு வரவழைக்கக் கூடாது” என்று சத்தியமூர்த்தி மீண்டும் கத்த, இருவருக்கும் இடையே வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியது.

மசாலா தண்ணீரில் நீந்திய எலியை பார்த்த பிறகும் 31 பானிபூரி சாப்பிட்ட நபர்: இணையத்தை உலுக்கிய வீடியோ

மசாலா தண்ணீரில் நீந்திய எலியை பார்த்த பிறகும் 31 பானிபூரி சாப்பிட்ட நபர்: இணையத்தை உலுக்கிய வீடியோ

பெற்ற தாயை கொன்ற மகன்

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சத்தியமூர்த்தி, கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் கஸ்தூரியை ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கஸ்தூரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரை விட்டார்… இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த கஸ்தூரியின் உடலைக் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயை கட்டையால் அடித்துக் கொன்ற அந்த கொடூர மகன் சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்…!!

English summary

“Don’t Talk to Any Man!” Pani Puri Vendor Kills Mother Over Shocking Condition in Tirupattur

Read More

Previous Post

செயலிழந்த துப்பாக்கிகள் – மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்

Next Post

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? யாருக்கெல்லாம் பொருந்தும்? முழு விவரம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? யாருக்கெல்லாம் பொருந்தும்? முழு விவரம்! | வணிகம் போட்டோகேலரி

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? யாருக்கெல்லாம் பொருந்தும்? முழு விவரம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin