யூ டியூப் தளத்தில் குறும்படத்தை இயக்கிய அனுபவம் கொண்ட கர்ரி பார்க்கர் என்பவர் இயக்கத்தில், மைக்கேல் ஜான்ஸ்டன், இன்டே நவர்ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான ஹாரர் ஹாலிவுட் திரைப்படம் ‘ஆப்செஷன்’
காதல் ஆசை விபரீதமாக மாறும் கதை
‘ஆப்செஷன்’ திரைப்படத்தின் கதை, இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் பேர் என்ற இளைஞரை மையமாகக் கொண்டு நகர்கிறது. தனது சக ஊழியரான நிக்கியை காதலிக்கும் அவர், தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். இதற்கிடையில், விருப்பங்களை நிறைவேற்றும் அதிசய சக்தி கொண்ட ஒரு பொம்மை அவருக்கு கிடைக்கிறது. நிக்கி தன்னை காதலிக்க வேண்டும் என்ற ஆசையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறிய பின்னர், எதிர்பாராத திகிலூட்டும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறத் தொடங்குகின்றன.
தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வேண்டும் என ஏங்கும் ஒருவனின் ஆசை, இறுதியில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்துவதைப் பற்றிய கரி பார்க்கரின் இந்த திகில் திரைப்படம்மிகப்பெரிய வசூல் சாதனையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவிலும் நல்ல வரவேற்பு
இந்த திரைப்படம் இந்தியாவில் வெறும் 362 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்ட போதிலும், ரூ80 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவான செலவில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திகில் திரைப்படங்களின் வசூல் சாதனைகளில் ‘ஆப்செஷன்’ குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று இந்தப் படம் தொடர்ந்து சக்கைப் போடு போட்டு வருகிறது.
இப்படம் எதிர்பாராத வெற்றிகளில் ஒன்றாக ஆனதுடன், அறிமுக இயக்குநரான கரி பார்க்கரை அந்த ஆண்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றியது.
ஓடிடி தளத்தில் ‘ஆப்செஷன்’
இந்நிலையில், ‘ஆப்செஷன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.
The post “ஆப்செஷன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

