தீபாவளி என்றாலே அன்பையும் கருணையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக நாம் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளியில் மைடின், மக்கள் ஓசை,ராகா, மின்னல் எப்ஃஎம் இணைந்து பிரகாசமான தீபாவளியின் வழி நம்பிக்கையைப் பகிர உங்களை அழைக்கிறது. அக்டோபர் 8 முதல் 30 வரை, நாடு முழுவதும் உள்ள 10 மைடின் பேரங்காடிகளில் நடைபெறும் Buy Donate முயற்சியில் நீங்களும் இணையுங்கள்.
உணவு, மளிகைப் பொருட்கள், தீபாவளி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கி, எங்கள் நன்கொடை பெட்டிகளில் செலுத்துங்கள். உங்களின் சிறிய பங்களிப்பு மலேசியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நல இல்லங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு செல்லும்.
நவம்பர் 2 முதல் 7 வரை, மைடினும் எங்கள் ஊடக நண்பர்களும் இந்த நன்கொடைகளை நேரடியாக வழங்கி, அவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுகிறோம். மகிழ்ச்சியைப் பகிர்வோம் நம்பிக்கையை ஏற்றுவோம்!



