International
oi-Nantha Kumar R
காபூல்: கேரளாவை சேர்ந்த பெண் யூடியூபர் அருனிமா ஆசையாக தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து நேர்ந்த சம்பவத்தால் அவர் அதிர்ந்து போய் உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தனியாக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு உயர்கல்வி கிடையாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் தான் கேரளாவை சேர்ந்த பிரபல டிராவல் விலாக்கரும், யூடியூபருமான அருனிமா ஆப்கானிஸ்தான் செல்ல முடிவெடுத்தார். இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் திட்டமிட்டப்படி அருனிமா ஆப்கானிஸ்தான் சென்றார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஏராளாமான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அருனிமா அங்கு சென்றார். ஆப்கானிஸ்தானில் சில இடங்களை அவர் சுற்றிப்பார்த்து வீடியோ பதிவிட்டார். நேற்று அவருக்கு ”அதிகாரப்பூர்வமான அனுமதி கடிதம் இல்லாததால் நீங்கள் முஜாகிதீனால் இப்போது கைது செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று அவசர மெசேஜ் சென்றது.
இதனால் பயந்துபோன் அருனிமா உடனடியாக அந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது பேஸ்புக்கில்பதிவிட்டார். அதில் தயவு செய்து எனக்கு இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும். நான் ஆப்கானிஸ்தானின் பம்யானில் பிரச்சனையில் உள்ளேன்” என்று பதிவிட்டு இருந்தார். அதன்பிறகு அடுத்த சில மணிநேரங்களில் அவர் தனது வலைதள பக்கத்தில் முஜாகிதீன்கள் என்னிடம் விளக்க கேட்டுவிட்டு விடுதலை செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
இதில் முஜாகிதீன் என்பது ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இஸ்லாமிய கொரில்லா பைட்டர்களை குறிக்கும். இவர்கள் தான் அந்த நாட்டின் மதம் மற்றும் நாட்டை காக்கும் படை வீரர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர் தப்பினார்.
இதுபற்றி அருனிமா கூறுகையில், ”ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக செல்லக்கூடாது. ஆனால்நான் தனியாக டிராவல் செய்ததால் அதனை குற்றம் என்று கூறினர். ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்ல தனித்தனியாக அனுமதி பெற வேண்டி உள்ளது. அந்த அனுமதியையும் நான் பெறவில்லை. ஏனென்றால் பெண் என்பதால் எனக்கு அதற்கான அனுமதியை தரமாட்டார்கள்.
இதனால் முதலில் தனியாக பயணித்ததாக கூறி என்னை கைது செய்தனர். அப்போது எனக்கு ஒருவர் உதவினார். அவர் தான் இப்போது 2வது முறையாக எனக்கு உதவினார். எனக்கும், முஜாகிதீன்களுக்கும் பாலமாக இருந்து பேசி பிரச்சனையை அவர் தான் முடித்து வைத்தார்” என்றார். இருப்பினும் அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அருனிமா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல் தாலிபான்கள் மற்றும் இந்திய தூதரகம் தரப்பிலும் எதுவும் சொல்லப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் அருனிமா இப்படி கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ஒருமுறை கைது நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். முன்னதாக ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் தனியாக டிராவல் செய்ததால் அருனிமா கைது செய்யப்பட்டார். இப்போது 2வது முறையாக அனுமதி கடிதம் இல்லை என்று கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் எனக்கு ஒருவர் உதவி செய்தார். பாம்யான் நகரில் உள்ள பிரச்சனையை கூறினேன். இதையடுத்து மீண்டும் அவர் உதவி செய்தார்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், ”ஆப்கானிஸ்தான் நாட்டின் சட்டப்படி பெண்கள் தனியாக டிராவல் செய்யக்கூடாது. இந்த சட்டத்தை மீறும்போது பெண்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றனர். ஆப்கானிஸ்தானில் அருனிமா கைது செய்யப்பட்டாலும் கூட தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதால் அவரது பாலோயர்ஸ்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

