• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய பாராலிம்பிக் : பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய பாராலிம்பிக் : பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 22, 2026 10:27 PM IST

இந்த வெற்றியின் மூலம், ஆசிய Para விளையாட்டு வரலாற்றில் இப்போட்டிப் பிரிவில் இந்தியா வெல்லும் முதலாவது பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்

News18
News18

ஆசிய பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நவீன் சிவக்குமாருக்கு தமிழ்நாடு அரசு ரூ. 30 லட்சத்தை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய Para விளையாட்டுப் போட்டிகளில் (Asian Para Games 2026) இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில், பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்களான நவீன் சிவகுமார் மற்றும் சூர்ய காந்த் யாதவ் ஜோடி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

இத்தொடரின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு SL3-SU5 (Men’s Doubles SL3-SU5) போட்டியில் களமிறங்கிய இந்தத் திறமையான ஜோடி, எதிரணிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ஆசிய Para விளையாட்டு வரலாற்றில் இப்போட்டிப் பிரிவில் இந்தியா வெல்லும் முதலாவது பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். அதுவும் தங்களது முதல் தொடரிலேயே (Debut) இந்தச் சாதனையைப் படைத்திருப்பது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறையையும் பெருமைப்படுத்தியுள்ளது.

இவர்களின் இந்த அசத்தலான சாதனையைப் பாராட்டி, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய Para பாட்மிண்டன் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலம்! நவீன் சிவகுமார் மற்றும் சூர்ய காந்த் யாதவ் ஜோடி 2026 ஆசிய Para விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தைக் வென்றுள்ளனர்.

தங்களது முதல் போட்டியிலேயே இவர்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது சிறப்புக்குரியது. இவர்களின் அசாத்தியமான குழுப்பணி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பெரிதும் பாராட்டத்தக்கவை. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நவீன் சிவக்குமாருக்கு தமிழ்நாடு அரசு ரூ. 30 லட்சத்தை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்!


வீரர் நவீன் சிவகுமார் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள்!

#CMJosephVijay‌

— CMOTamilNadu (@CMOTamilnadu) October 22, 2026

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்!

வீரர் நவீன் சிவகுமார் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டரில் 7 ஆக பதிவு.. குலுங்கியது பூமியின் கூரை | Powerful earthquake hits in Tibet Measures 7 on the Richter scale

Next Post

ஜியோ IPO-வில் பங்கு ஒதுக்கீட்டை உறுதி செய்ய மாஸ்டர் பிளான்.. எந்த பிரிவில் விண்ணப்பிப்பது நல்லது? | வணிகச் செய்திகள்

Next Post
ஜியோ IPO-வில் பங்கு ஒதுக்கீட்டை உறுதி செய்ய மாஸ்டர் பிளான்.. எந்த பிரிவில் விண்ணப்பிப்பது நல்லது? | வணிகச் செய்திகள்

ஜியோ IPO-வில் பங்கு ஒதுக்கீட்டை உறுதி செய்ய மாஸ்டர் பிளான்.. எந்த பிரிவில் விண்ணப்பிப்பது நல்லது? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin