Last Updated:
அரசுப் பதவியில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பொது வாழ்க்கையில் அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் நிர்வாகத்தை மேம்படுத்தி, தேசிய அளவில் கவனம் பெற்றதன் மூலம், கடந்த 2104 ஆம் ஆண்டு பிரதமராகவும் அரியணையில் ஏறினார். இதன் மூலம், பொது வாழ்க்கையில் பிரதமர் மோடி அரசு பதவிக்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
आज नई दिल्ली के श्री विनायक मंदिर में पूजा-अर्चना की।
भगवान श्री गणेश से देशभर के अपने परिवारजनों की सुख-समृद्धि और उत्तम स्वास्थ्य की कामना की।विघ्नहर्ता की कृपा से सबका कल्याण हो और देश निरंतर प्रगति के मार्ग पर आगे बढ़ता रहे। https://t.co/ZPADyotAFk
— Narendra Modi (@narendramodi) October 7, 2026
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், வளமாகவும், நல்ல உடல்நலத்துடனும் வாழ இறைவனை வேண்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விநாயகரின் அருளால் வளர்ச்சி பாதையில் தேசம் தொடர்ந்து பயணிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


