அமெரிக்கா – ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் முறிந்த நிலையில், இரு நாடுகளும் மீண்டும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் தொடர்ச்சியான ஒன்பதாவது நாள் தாக்குதல்களை அடுத்து, ஈரான் ராணுவம் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஆளில்லா டிரோன்கள், ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதில், குவைத் நாட்டில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின்சார உற்பத்தி நிலையம் சேதமடைந்தன.
இதேபோன்று ஜோர்டான் நாட்டின் அகாபா நகர் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. அதேநேரம் இஸ்ரேலிய மற்றும் ஜோர்டானியப் படைகள் ஈரானிய ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் டிரோனை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது திடீரென வெடித்துச் சிதறியதில் அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், ஈரான் மீதான தாக்குதலை அதிகரிக்கும்படி அமெரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து ஈரானின் சபாஹார், கொனாரக், பந்தர் மஹ்ஷஹர், பந்தர் இமாம் கொமேனி உள்ளிட்ட இடங்களில் அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் முறிந்த நிலையில், இரு நாடுகளும் மீண்டும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் தொடர்ச்சியான ஒன்பதாவது நாள் தாக்குதல்களை அடுத்து, ஈரான் ராணுவம் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஆளில்லா டிரோன்கள், ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதில், குவைத் நாட்டில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின்சார உற்பத்தி நிலையம் சேதமடைந்தன.
இதேபோன்று ஜோர்டான் நாட்டின் அகாபா நகர் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. அதேநேரம் இஸ்ரேலிய மற்றும் ஜோர்டானியப் படைகள் ஈரானிய ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் டிரோனை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது திடீரென வெடித்துச் சிதறியதில் அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், ஈரான் மீதான தாக்குதலை அதிகரிக்கும்படி அமெரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து ஈரானின் சபாஹார், கொனாரக், பந்தர் மஹ்ஷஹர், பந்தர் இமாம் கொமேனி உள்ளிட்ட இடங்களில் அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.