அதிலும் குறிப்பாக, “பயணிப்பவர் பெண்பாலினத்தவராக இருந்தால், தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இது மிகப்பெரும் வெட்கக்கேடு. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் அவமானம், தலைகுனிவு.
பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை இந்தியாவை அனைத்து தளங்களிலும் பின்னோக்கி இழுத்து கொண்டு செல்கிறார். 15 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி நகரும்.
மத கலவரம், கலாசார செருக்கு, வெறுப்பு பேச்சு, வீண் விளம்பரங்கள் போன்ற முட்டாள்தனங்களுக்கு பாஜக அரசு செலுத்தும் அக்கறையை நாட்டின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் காண்பிக்க வேண்டும்”.

