விலைவாசி உயர்வு, மத்திய கிழக்குப் போர் மற்றும் அதிகருக்கும் அரசாங்கச் செலவு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சம் தருகின்றன.
அமெரிக்காவின் தேசியக் கடன் முதல்முறையாக 40 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
அமெரிக்கா அதன் நாட்டுச் செலவுகளையும், போர்ச் செலவுகளையும் சமாளிக்க கடனை நம்பியுள்ளது.
இதனால் அமெரிக்காவின் கடன் மிகவேகமாக வளர்ந்து வருகிறது.
விலைவாசி உயர்வு, மத்திய கிழக்குப் போர் மற்றும் அதிகருக்கும் அரசாங்கச் செலவு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சம் தருகின்றன.
ஏனைய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் விதித்த வரிகள் கடன் எதிர்பார்த்ததைவிட வேகமாக அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கம், 2008ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்கு முன்பு இருந்ததைவிட அதிக வட்டி விகிதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையில் செயல்படுகிறது.
1980இல் அமெரிக்காவின் கடன் ஒரு டிரில்லியன் டாலருக்கும் குறைவாகவே இருந்தது.
அமெரிக்கா ஒரே ஒரு நாட்டுக்குக் கடன்காரர் அல்ல. அமெரிக்காவின் கடன் முக்கியமாக அமெரிக்க வங்கிகள், முதலீட்டாளர்கள், ஓய்வூதிய நிதிகள், Federal Reserve, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அரசுகள் — குறிப்பாக ஜப்பான், இங்கிலாந்து, சீனா ஆகியோரிடம் உள்ளது.
அதாவது, அமெரிக்காவின் பெரும்பாலான கடன் அமெரிக்காவுக்குள்ளேயே உள்ள முதலீட்டாளர்களிடமே உள்ளது; வெளிநாடுகள் வைத்திருப்பது ஒரு பகுதி மட்டுமே. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

