வேலூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின், வாகனத்தை விரட்டிச் சென்ற செய்தியாளர்கள், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். விஜய் மாநாட்டில் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடப்பதாக பேசப்பட்டதே, பிறப்பால் முதல்வராக ஆனார்கள் என்று பேசப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் ஸ்டாலின், ‘‘நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை. யாருங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வர் ஆனார். அந்த அறிவு கூட இல்லை, அந்த ஆளுக்கு,’’ என்று காட்டமாக பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

