• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இலங்கையில் மழை தொடரும் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இலங்கையில் மழை தொடரும் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வானிலை & சூழல்
/
அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இலங்கையில் மழை தொடரும்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடைந்து வரும் நிலையில் இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை அமைப்பினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் ஏற்படாது என்ற போதிலும், அதனை நோக்கிய காற்றின் சுழற்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தாக்கத்தால் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது. அதேவேளை, வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Read More

Previous Post

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் – எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

Next Post
அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் – எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் - எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin