அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் சீட் பெல்ட் (Seat belt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் போது சீட் பெல்ட் வசதி கொண்டிராத வாகனங்களுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அதிகாரிகள்
அதாவது நேற்றைய தினம் (20-06-2026) முதல் சீட் பெல்ட் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையின் போக்குவரத்து அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள அதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த ஆரம்பக்கால சலுகைக்காலம் ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் இந்த ஒழுங்குமுறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தேசிய வீதி பாதுகாப்பு சபை அறிவித்திருந்தது.
இருப்பினும் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில் அவை உற்பத்தி செய்யப்பட்ட போது சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மட்டும் மேலும் மூன்று மாத கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

