பின்னர் இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்பட்டு, பொதுப் பிரிவினர் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 எனவும், பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு மாதம் ரூ. 1,200 எனவும் செயல்படுத்திவந்தது. பிறகு 2026ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில பட்ஜெட்டில் லக்ஷ்மி பந்தார் திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்படும் தொகையை மேலும் உயர்த்தி அறிவித்தார் மம்தா பானர்ஜி. அதன்படி பொதுப் பிரிவு பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 எனவும், பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு மாதம் ரூ. 1,700 எனவும் உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டுவந்தது.


