3
சீனாவின் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் கடல்சார் சக்தியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அதிநவீன விமானந்தாங்கி கப்பலொன்றை சீனா கட்டி வருவதாக அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் முன்னாள் தளபதியும் அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் அதிகாரியுமான தோமஸ் ஷுகார்ட் தெரிவித்துள்ளார்.
பிளனட்ஸ் லெப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்மதி படங்களை ஆதாமாகக் கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக சி.என்.என் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த அதிநவீன விமானந்தாங்கிக் கப்பல், தெற்கு மாகாணமான குவாங்டொங்க்கின் லங்சு தீவிலுள்ள குவாங்சூ சிப்யார்ட் இன்டர்நெசனல் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.
சீனாவிடம் ஏற்கனவே உள்ள விமானந்தாங்கி கப்பலை விடவும் இக்கப்பல் மிகவும் சிறியது. ஒரு வேளை கடல்சார் ஆராய்ச்சிக்காக உலகின் முதலாவது சிவிலியன் விமானந்தாங்கிக் கப்பலாக இதனை சீனா கட்டுவதாக இருக்கலாம்.
அதேநேரம், சீனாவின் தென்கிழக்கு முனையிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் மற்றொரு புதுவகை விமானம் தாங்கி கப்பலும் கட்டப்பட்டு வருவதைக் காட்டும் செய்திமதிப் படங்களையும் பிளனட்ஸ் லெப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சீனாவும் நவீன போர்க்கப்பல்களை உருவாக்கி வருகினறது.
அந்த வகையில் சீனாவின் மிகப் பெரிய விமானந்தாங்கிக் கப்பலான புஜியான் ஏற்கனவே வௌ்ளாட்டம் விடப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. அக்கப்பல் எதிர்வரும் 2026 இல் சீனக்கடற்படையில் சேர்க்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)