Last Updated:
ஐஐடி டெல்லியைச் சேர்ந்த இரண்டு நண்பர்களான விதித் ஆத்ரேயா மற்றும் சஞ்சீவ் பரன்வால் ஆகியோர் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் “மீஷோ” என்ற சமூக வர்த்தக தளத்தை உருவாக்கியுள்ளனர்.
எந்த வெற்றியும் எளிதில் கிடைக்காது. வெற்றியை அடைய கடின உழைப்பும், உறுதியும் அவசியம். கடினமாக உழைத்தால் வெற்றி வரும். அப்படிப்பட்ட நண்பர்களின் கடின உழைப்பால், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை ஆரம்பித்த கதையைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஐஐடி டெல்லியைச் சேர்ந்த இரண்டு நண்பர்களான விதித் ஆத்ரேயா மற்றும் சஞ்சீவ் பரன்வால் ஆகியோர் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் “மீஷோ” என்ற சமூக வர்த்தக தளத்தை உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவருமே “மீஷோ”வின் நிறுவனர்கள் ஆவார்கள். இது ஒரு சமூக வர்த்தக தளமாகும், இது ஈ-காமர்ஸ் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது ரூ.40,000 கோடி மதிப்பிலான பேரரசாக மாறியுள்ளது. விதித் ஆத்ரேயா மற்றும் சஞ்சீவ் பரன்வால் ஆகியோரின் வெற்றிப் பயணத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
“மீஷோ” நிறுவனர்களின் பயணம்:
விதித் ஆத்ரேயாவும், சஞ்சீவ் பரன்வாலும் ஐஐடி டெல்லியில் கிளாஸ்மேட் ஆவார்கள். ஐஐடியில் பட்டம் பெற்ற பிறகு, சஞ்சீவ் பரன்வால் ஜப்பான் சென்றார். அங்கு அவர் சோனியின் “கோர் டெக் டீம்” இல் பணியாற்றினார். அப்போது அவர் நிறைய கற்றுக்கொண்டார். அதனால் அவருக்கு நல்ல அனுபவமும் கிடைத்தது. இதனால் அவர் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று விரும்பினார். இந்த கனவை நிறைவேற்ற, அவர் தனது நண்பர் விதித் ஆத்ரேயாவை தொடர்பு கொண்டார். விதித் அப்போது பெங்களூருவைச் சேர்ந்த “InMobi” நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சஞ்சீவ் மற்றும் விதித் ஆகிய இருவரும் தங்களது அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஆரம்பத்தில், இருவரும் 2015ஆம் ஆண்டில் பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ஒரு சிறிய இரண்டு அறைகள் கொண்ட பிளாட்டில் “மீஷோ”வை தொடங்கினர். அவரது முதல் அலுவலகம் அவரது டைனிங் டேபிள் ஆகும்.
“மீஷோ”வின் பிறப்பு:
சஞ்சீவ் மற்றும் விதித் ஆகிய இருவரின் மனதிலும் இருந்த ஒரு எளிய யோசனை “மீஷோ” என்ற ஆப் ஆக மாறியது. இது சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் என யாராக இருந்தாலும், ஆன்லைனில் தங்கள் சொந்த வணிகத்தைத் தொடங்க உதவும் ஒரு முயற்சியாகும். மாபெரும் ஈ-காமர்ஸ் தளங்கள் செழித்து வளர்ந்தாலும், சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கக்கூடிய ஒரு தளத்தைக் கொண்டிருப்பதன் அவசியத்தை உணர்ந்ததன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
இதையும் படிக்க: எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வர இந்தியப் பெண்.. யார், வெற்றிக் கதை தெரியுமா?
“ஃபேஸ்புக்”, “இன்ஸ்டாகிராம்” மற்றும் “வாட்ஸ்அப்” போன்ற சமூக ஊடக சேனல்கள் மூலம் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரை இணைக்க இந்த தளம் திட்டமிடப்பட்டுள்ளது. “மீஷோ” என்றால் “அப்னி டுகான்” அல்லது “உங்கள் கடை” என்று பொருள். ஏப்ரல் 2021ஆம் ஆண்டில், வணிகத்தின் மதிப்பு 2.1 பில்லியன் டாலர்களை எட்டியது. இது செப்டம்பர் 2021க்குள், வணிகத்தின் மதிப்பு 4.9 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
March 13, 2025 12:51 PM IST
அதிக சம்பளம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு ரூ.40,000 கோடி மதிப்பு நிறுவனத்தை உருவாக்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்…!