• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அதிகாரிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது”.. கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை காட்டம் | Temple Property Irregularities: Madurai HC Expresses Anguish Over Officials’ Conduct

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“அதிகாரிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது”.. கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை காட்டம் | Temple Property Irregularities: Madurai HC Expresses Anguish Over Officials’ Conduct
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Published: Thursday, October 8, 2026, 18:20 [IST]

மதுரை: “கோயில் சொத்துகளில் முறைகேடு செய்யும் அதிகாரிகளுக்கு தற்போது நீதிமன்றம் என்றாலே பயம் இல்லாமல் போய்விட்டது” என ஐகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கோயில் சொத்துகளில் அதிகளவில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Temple Property Irregularities Madurai HC Expresses Anguish Over Officials Conduct

திருத்தொண்டர் சபையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துகள் உள்ளன. ஆனால், ஏராளமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் வாடகை முறையாக வசூல் செய்யப்படுவதில்லை, நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தும் வசூல் செய்யப்படாமலேயே உள்ளது, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் முறையாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் இடத்தை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்வோர் எப்படி வாடகை செலுத்தாமல் இருக்க மனம் வருகிறது? கோவில் நிர்வாகம் முறையாக நோட்டீஸ் அனுப்பி அவர்களை காலி செய்ய வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், முன்பெல்லாம் நீதிமன்ற வழக்கு என்றால் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். கோயில் சொத்துகளில் முறைகேடு செய்யும் அதிகாரிகளுக்கு தற்போது நீதிமன்றம் என்றாலே பயம் இல்லாமல் போய்விட்டது என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

5 வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது, அதிகாரிகள் மாறுகிறார்கள், தாங்கள் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் அதிகாரிகள் மத்தொயில் மேலோங்கிவிட்டது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோயில் சொத்துகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

English summary

High Court Madurai Bench has expressed anguish, stating that officials who engage in irregularities regarding temple properties no longer fear the courts.

Read More

Previous Post

சிறையிலுள்ள பிக்குகளைக் கையாளும் சட்டங்களைத் திருத்த விசேட குழு: ஜனாதிபதி நடவடிக்கை – Sri Lanka Tamil News

Next Post

நடைமுறை என்ன? அஜித் அகர்கர் விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா கேட்ட கேள்வி | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
நடைமுறை என்ன? அஜித் அகர்கர் விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா கேட்ட கேள்வி | Sports News (விளையாட்டு செய்திகள்)

நடைமுறை என்ன? அஜித் அகர்கர் விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா கேட்ட கேள்வி | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin