Last Updated:
பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா – இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2026 செப்டம்பர் 8 முதல் 10 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். இப்பயணத்தின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர், இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை நடத்துவதோடு, கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடுகிறார். அவருடன், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுவும் இலங்கைக்குச் செல்கிறது.


