இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு நடப்பு ஆண்டு கொஞ்சம் மோசமான ஆண்டு என்றே கூறவேண்டும். ஐபிஎல்லில் குஜராத் அணியிலிருந்து விலகிய பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரசிகர்கள் பலர் ஹர்திக்கை ஏற்காதநிலையில், அவர் தலைமையிலான மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
இந்த நெருக்கடி ஒருபுறம் என்றால், மறுபுறம் அவரின் விவகாரத்து குறித்த செய்தி காட்டுத்தீ போல் பரவி கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது என்றே கூறலாம்.
செர்பியா நாட்டைச் சேர்ந்தவரும் பாலிவுட் நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிக்கிற்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே 2020ல் காதல் மலர்ந்து. லிவ்ங் டூ கெதராக வாழ்ந்து வந்த நிலையில் நடாஷா கருவுற்றார். பின்னர் கொரோனா ஊரங்கு காரணமாக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். சென்ற ஆண்டு காதலர் தினத்தன்று, மகனுடன் சேர்ந்து இருவருமம் இரண்டாவது முறையாக மணமுடித்தனர்.
இதையும் படிக்க:
விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஹர்திக் மனைவி நடாஷா பதிவிட்ட கமெண்ட்..
மிகவும் அன்பு நிறைந்த தம்பதியாக இருவரும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில், திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஐபிஎல் போட்டிகளை காண நடாஷா வராததும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த பாண்டியாவை நீக்கியதும், நடாஷா பிறந்தநாளுக்கு எந்த பதிவையும் பாண்டியா போடாததும் விவகாரத்து குறித்த வதந்ததிக்கு தொடக்க புள்ளியாக அமைந்தன.
இந்த யூகங்களுக்கு மத்தியில், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்றபோது, விவாகரத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வெறும் நன்றி என்று மட்டும் கூறி சென்றார் நடாஷா.
இந்த விவகாரத்து மூலம் பாண்டியாவின் சொத்தில் 70 சதவீதத்தை அதாவது 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நடாஷா ஜீவனாம்சமாக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பழைய வீடியோ வைரலாகி உள்ளது. அதில், தான் வாங்கும் கார், வீடு என அனைத்துமே தனது அம்மாவின் பெயர்தான் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். எதிர்காலத்தில் தன்னுடைய சொத்தில் பாதியை இழக்க விரும்பவில்லை என்றும் நகைச்சுவையாக கூறி இருந்தார். விவாகரத்து பற்றி அன்றே கணித்து ஹர்திக் இதை கூறியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Hardik pandya is a smart man.. he knew about this divorce thing could happen with Natasha. #Hardikpandya #Hardik #pandya #natasha #divorce pic.twitter.com/xzFSvtrPFq
— Win Wonders (@memes_war_mw) May 25, 2024
இதற்கிடையே, 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பேட்ச் சனிக்கிழமை நியூயார்க் சென்றது. இதில் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. இதனால், அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
.