வியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான வாக்களிப்பு என்பது ஒரு தலைமுறையில் ஸ்காட்லாந்துக்காக ஒரேயொரு தடவை எடுக்கப்படக் கூடிய ஒரு முடிவு என்று இரு தரப்பு தலைவர்களும் கூறியுள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் தமது தரப்பு தோல்வியுற்றால், தான் மற்றுமொரு கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கப்போவதில்லை என்று, ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கு ஆதரவான, அதன் முதலமைச்சர் அலக்ஸ் சல்மண்ட் கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்தை ஐக்கிய ராட்சியத்துடன் இணைத்து வைத்திருப்பதற்கு ஆதரவான அணியின் தலைமைப் பிரச்சாரகரான அலிஸ்டர் டார்லிங் அவர்கள், சுதந்திரத்துக்கு ஆதரவாக ஒருவர் வாக்களித்து விட்டு, பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டால், அதற்குப் பின்னர் அவருக்கு வாய்ப்பே இல்லாது போய்விடும் என்று எச்சரித்துள்ளார்.