சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது ‘ItsRainingRaincoats’. மேலும் வெளிநாட்டு ஊழியர்களின் மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில், அவர்களை சுற்றுலாவிற்கும் அழைத்து சென்று மகிழ்வித்து வருகிறது.
ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்?
அந்த வகையில், சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை (Migrant Workers) வரும் மார்ச் 10- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாண்டாய் உயிரியல் பூங்காவிற்கு (Mandai Zoo) இலவசமாக அழைத்துச் செல்லவுள்ளதாக ‘ItsRainingRaincoats’ அறிவித்துள்ளது.
அதன்படி, மாண்டாய் உயிரியல் பூங்காவிற்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் https://forms.gle/sHm5W7vcxbnExESY9 என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவுச் செய்துக் கொள்ளலாம். அன்றைய தினம் காலை 09.15 AM மணி முதல் மாலை 04.15 PM மணி வரை மாண்டாய் உயிரியல் பூங்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் சுற்றிப் பார்க்கலாம்.
‘ItsRainingRaincoats’ மூலம் முதன்முறையாக செல்ல விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே பதிவுச் செய்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.