பல்வேறு வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் போட்டிகள் ஒரு பக்கம் நடத்தப்பட்டு வந்தது.
பயோ பபுல் மூலம் வீரர்கள் பாதுகாக்கப்பட்டு, ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனாலும் வீரர்களுக்கு இடையே கொரோனா அச்சம் இருந்தது.
கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வீரர்கள் தொடரில் இருந்தே வெளியேறினார்கள். பெங்களூர் அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா வெளியேறி உள்ளனர்.
டெல்லி அணியில் இருந்து அஸ்வின் வெளியேறி உள்ளார். ராஜஸ்தான் அணியில் இருந்து ஆண்ட்ரு டை வெளியேறி உள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி, இன்னொரு வீரர் சந்தீப் வாரியாருக்கு கொரோனா ஏற்பட்டது. பின்னர் சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி உட்பட 5 பேருக்கு அணியில் கொரோனா ஏற்பட்டது.
டெல்லி அணியின் அமித் மிஸ்ரா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் ஹைதராபாத் அணியில் விர்த்திமான் சாகா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது ஐபிஎல் போட்டிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இனி போட்டிகள் எப்போது நடக்கும் என்று தெரியாததால் ஐபிஎல் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.