காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராஜஸ்தானில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தில் நுழைந்த பிறகு மொரேனாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
மத்திய பாஜக அரசு பத்து முதல் பதினைந்து தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் அது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மறுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள விவசாய அமைப்புகள் தற்போது பயிர்களுக்கு சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்காகப் போராடி வருகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் உள்பட நாட்டின் 73 சதவீத மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு துறைகளில் எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை என்றும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் என்றும் காந்தி கூறினார்.
இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு துறைகளில் இந்த சமூகங்களின் சம பங்களிப்பை உறுதி செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். முன்னதாக பிற்பகல், காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, மொரீனா மாவட்ட எல்லையில் காந்தி மற்றும் மூத்த தலைவர் அசோக் கெலாட்டை வரவேற்றார்.