ராஃபிள்ஸ் சிட்டியில் (Raffles City) உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டது.
கடந்த 2009- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள சிட்டி ஹாலில் (City Hall) உள்ள ராஃபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டரில் மெக்டொனால்ட்ஸ் உணவகம் தனது கிளையைத் திறந்தது. இந்த கடைக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து பர்க்கர் உள்ளிட்ட உணவுகளை அருந்திவிட்டு செல்வார்கள்.

இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ராஃபிள்ஸ் சிட்டியில் உள்ள தனது உணவகத்தின் கிளையை மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் நிரந்தரமாக மூடியுள்ளது. இதனால் இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 29- ஆம் தேதி அன்று ராஃபிள்ஸ் சிட்டியில் மெக்டொனால்ட்ஸ் கிளை கடைசியாக இயங்கியுள்ளது. அந்த நாளில், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் குழுவாகப் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அத்துடன், உணவகத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பணியாளர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்தும், அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் பணியாளர்களுடன் உரையாடி மகிழ்ந்ததுடன், ராஃபிள்ஸ் சிட்டி மெக்டொனால்ட்ஸ் உணவகத்துக்கு பிரியா விடை கொடுத்தனர்.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா!
ராஃபிள்ஸ் சிட்டி மெக்டொனால்ட்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதை கூகுள் மேப்ஸ் (Google Maps) உறுதி செய்துள்ளது. இதனிடையே, ராஃபிள்ஸ் சிட்டியில் மெக்டொனால்டு இருந்த வளாகத்தை இத்தாலிய உணவகம் (Italian Restaurant) கைப்பற்றியதாகவும், இந்த ஆண்டின் பாதியில் உணவகத்தைத் திறக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.