இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயனடைவதற்காக நிராமயா மருத்துவ காப்பீடு (Niramaya Health Insurance) திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டமானது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கி வரும் தேசிய அறக்கட்டளையால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம்:
தேசிய அறக்கட்டளை விதி, 1999 இன் கீழ் PwD-க்கள் பயனடையும் வகையில் மலிவான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குவதே நிராமயா திட்டத்தின் நோக்கம் ஆகும். திருப்பி செலுத்துதலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகையை இந்த இன்சூரன்ஸ் திட்டம் வழங்குகிறது.
இது ஒரு விரிவான காப்பீட்டு திட்டம். அனைவரும் வாங்க கூடிய வகையில் விலை மலிவானதாகவும், எளிமையானதாகவும் உள்ளது. வயதை கருத்தில் கொள்ளாமல் நிலையான பிரீமியம் கொண்டது. ஊனத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமான மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுகிறது. வழக்கமான செக்கப்கள், மருத்துவமனையில் சேர்தல், சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் போக்குவரத்து போன்ற அனைத்து விதமான செலவுகளுக்கும் இந்த திட்டம் மூலமாக காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேருவதற்கு பிரீ இன்சூரன்ஸ் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை. எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மருத்துவமனையை தேர்வு செய்யும் வசதி உள்ளது.
பலன்கள்:
– பல்வேறு மருத்துவ செலவுகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
– மருந்துகள், பரிசோதனைகள் போன்ற அனைத்திற்குமான கவரேஜ் வழங்கப்படும்.
– பல் பிரச்னைகள் ஏற்படுவதில் இருந்து தடுப்பதற்கான சேவைகளும் இதில் அடங்கும்.
– ஊனநிலை முற்றாமல் தடுப்பதற்கு தேவையான சிகிச்சைகள் உள்ளது.
– அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் மற்றும் அது சம்பந்தமாக மருத்துவமனையில் தங்குதல் போன்றவற்றிற்கு கவரேஜ் உண்டு.
– ஊனம் மற்றும் அது தொடர்பான சிக்கல்களை சமாளிப்பதற்கு தேவையான காப்பீடு.
– மாற்று சிகிச்சை முறைகளுக்கான கவரேஜ்.
– மருத்துவ பராமரிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்திற்கு பணம் திருப்பி தரப்படும்.
தகுதி வரம்பு:
குறைந்தபட்சம் ஒரு ஊனநிலை கொண்ட அனைத்து PwD-க்களும் தேசிய அறக்கட்டளை விதி 1999-ன் கீழ் தகுந்த மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்களுடன் இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுகிறார்கள்.
PwD-ன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் நிராமயா சேர்க்கைக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு தேவையான டாக்குமென்ட்களுடன் சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களை வழங்கி வர வேண்டும். சேர்க்கை மற்றும் அப்ரூவல் வெற்றிகரமாக செய்யப்பட்டவுடன் ஹெல்த் ID நம்பர் அல்லது கார்டு ஒன்று வழங்கப்படும். இதனை ஆன்லைனிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள் :
– தகுந்த மருத்துவ அதிகாரி அல்லது மாவட்ட மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்
– வறுமை கோட்டிற்கு கீழ்நிலை அல்லது BPL கார்டு ( வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தால்).
– முகவரி சான்றிதழ்.
– பேமெண்ட் சான்றிதழ்.
– பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமான சான்றிதழ்
கிளைம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் :
– நிராமயா கார்டின் நகல் அல்லது ஹெல்த் ஐடி கார்டு நம்பர்.
– மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழின் நகல் (செல்ஃப் அட்டெஸ்டெட் பெற்றிருக்க வேண்டும்).
– மருத்துவர் வழங்கிய அசல் பிரிஸ்கிரிப்ஷன்.
– மருத்துவமனை, மருந்து, மருத்துவர் கட்டணம், சிகிச்சை கட்டணம், போக்குவரத்து கட்டணம் போன்றவற்றிற்கான அசல் ரசீதுகள்.
– அனைத்து ரிப்போர்ட்டுகளின் ஒரிஜினல்.
அருகில் உள்ள நிராமயா சேர்க்கை மையத்தை தெரிந்து கொள்வதற்கு
இங்கே கிளிக்
செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…