மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள பள்ளத்தாக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த 29 வயதான ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மார்ச் 12ஆம் தேதி அன்று நடந்தது.
தீயணைப்பு துறையினருக்கு மதியம் 1 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த நபரின் உடலில் காயங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.