தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அவர் பரிசோதனை முடிந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துபாய் போன்ற வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில் தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது.
விரைவில் மீண்டும் துபாயில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|