ராகுல் காந்திக்கு மரியாதை தெரியாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையாக விமர்சித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் போட்டியிட்டு அவரை தோற்கடித்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
ரைசிங் பாரத் என்ற 2 நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கி முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றுள்ளது. நாளை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார்.ஏற்கனவே 3 முறை ரைசிங் பாரத் மாநாட்டி நியூஸ் 18 குழுமம் நடத்தியுள்ளது. முதல் நாள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், பல்துறை வல்லுனர்கள் பேசியுள்ளனர்.
காலையில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புல்லட் ரயில்கள் இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.
மாலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், அமேதி மக்களவை தொகுதி உறுப்பினருமான ஸ்மிருதி இரானி பேசியதாவது- இந்த மக்களவை தேர்தலில் INDI கூட்டணியின் தலைவர்களும், தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் மக்கள் அப்படியில்லை. பிரதமர் மோடி தான் தொலைநோக்கு திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்தி வருகிறார்.
சாதி, மத ரீதியில் ராகுல் காந்தி பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி அவர் முன்பு எம்.பி.யாக இருந்த அமேதி தொகுதியில் எதுவுமே செய்யவில்லை. தொகுதி மக்கள் தங்களை எப்போதும் எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்பதைத்தான் ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் விரும்பினர். என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்மிருதி இரானியிடம் Rapid Fire முறையில் அடுக்கடுக்காக கேள்வி கேட்கப்பட்டது. சக்தி? என்று கேட்கப்பட்டதற்கு துர்கா தேவியும், இந்தியாவும் என்று ஸ்மிருதி பதிலளித்தார். 370? என எத்தனை தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என்று கேட்டதற்கு 400 ப்ளஸ் என்றும், ராகுல் காந்தி என்று கேட்கப்பட்டதற்கு அவர் மரியாதை தெரியாதவர் என்றும் ஸ்மிருதி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…