புதுடெல்லி: இந்தியாவில் மத வேறுபாடு இன்றிசிஏஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தலிபான் அரசியல் தலைமை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். அவர்களின் அரசியல் தலைமை அலுவலகம் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் செயல்படுகிறது. அந்த அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்தியாவில் புதிதாக அமல்செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மதவேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு சுகைல் ஷாகீன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் அந்த நாட்டில் வசித்த 300 சீக்கியர்கள், இந்துக்கள் பத்திரமாகஇந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.