சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கும் திட்டத்தை அடுத்த நிதியாண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 4 சதவீதம் அதிகரித்து 50 சதவீதமாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இதனால், 49 லட்சத்து 18,000 மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சத்து 95,000 ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.12,868 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கும் திட்டத்தை அடுத்த நிதியாண்டு வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, உஜ்வாலா திட்டத்தில் உள்ள 10 கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம், அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also;22 போதைப் பொருள் உற்பத்தி இல்லா மாநிலம் தமிழ்நாடு – டிஜிபி சங்கர் ஜிவால்
இந்தியாவில் செயற்கை புலனறிவு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தியா ஏஐ (AI) தொழில்நுட்ப இயக்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.10,371 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.285 அதிகரித்து, ரூ.5,335 ஆக நிர்ணயம் செய்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…