பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கிறது? இந்த கேள்விகள் எப்போதோ உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம். இந்த கேள்விக்கான பதில்களை இப்போது இங்கே பார்க்கலாம்.
அறிவியலின்படி, பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு மிக அருகில் உள்ள நகரம் கானாவின் தகோராடி ஆகும். கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆப்ரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
வானியலாளர்களின் கூற்றுப்படி, கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளது. அதனால்தான் இந்த இடத்தை பூமியின் அடையாளமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள இந்த கானா நாட்டின் வரலாறு மிகவும் மர்மமானது. நடுவில் இருப்பதால், இங்குள்ள வளிமண்டலம் முற்றிலும் வேறுபட்டது. உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கு அதிக வெப்பம் நிலவுகிறது. மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் சென்றால் தீயில் எரியும் அளவிற்கு வானிலை நிலவுவதாக தெரிகிறது.
கானா- ஒரு காலத்தில் மிகவும் வளமாக இருந்த நாடு :
ஒரு காலத்தில் கானா நாடு மிகவும் வளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் விநியோகிக்கக்கூடிய அளவுக்கு இங்கு தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தங்கச் சுரங்கங்களைப் பிடிக்க போர்ச்சுகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.
இதையும் படிங்க : கரண்ட் பில் கட்ட பணம் கேட்ட காதலன்… கடுப்பான காதலி என்ன செய்தார் தெரியுமா?
மேலும், கானா மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானது. அங்கு பலர் வண்ணமயமான ஆடைகளில் காணப்படுவார்கள். கானா, மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும். வோல்டா ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும்.
கொள்ளளவு அடிப்படையில், இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக உருவாக்கப்பட்டது. தற்போது, 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கானா, மேற்கு ஆப்ரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…