பட மூலாதாரம், PA
மனைவி மகனுடன் இளவரசர் வில்லியம்
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட், இரண்டாவது தடவையாக கருவுற்றிருக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.
முதல் குழந்தை கருவுற்ற நேரத்தில் இருந்ததுபோலவே மசக்கை கடுமையாக இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மசக்கை அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சி ஒன்றில் தான் கலந்துகொள்வதை கேம்பிரிஜ் சீமாட்டி கேட் ரத்துச் செய்ய வேண்டி வந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இன்னுமொரு கொள்ளுப் பேரனோ பேத்தியோ வரவிருப்பதையிட்டு பிரிட்டிஷ் மஹாராணி மகிழ்ச்சியடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை கூறுகிறது.
பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இளவரசர் வில்லியம்.
வில்லியமுக்கும் கேட்டுக்கும் 2013ன் பிறந்த முதல் பிள்ளையின் பெயர் இளவரசர் ஜார்ஜ்.