இந்தியாவிலேயே முதன்முதலாக, நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
அப்போது நாட்டிலேயே முதன்முதலாக, நீருக்கு அடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை அவர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்த அவர் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடினார்.
ஹுக்ள் நதிக்கடியில் ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரை 4.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட இதற்கான பணிகள் 2009ஆம் ஆண்டு தொடங்கியது.
#WATCH | West Bengal: Prime Minister Narendra Modi travels with school students in India’s first underwater metro train in Kolkata. pic.twitter.com/95s42MNWUS
— ANI (@ANI) March 6, 2024
சுமார் ரூ.5,000 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இது, இந்தியாவின் தொழில்நுட்ப கட்டுமான வல்லமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…