ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பில்கேட்ஸ், இந்தியாவில் மிகவும் பிடித்த விஷயங்களில் டீ தயாரிப்பு என்று மெய்சிலிர்த்தார்.
கொதிக்குற பாலுல கொஞ்சம் டீத்தூள், நாலு ஏலக்காய், கொஞ்சம் இஞ்சி தட்டிப்போட்டு சுடச்சுட டீயை வடிகட்டி கொடுத்தா, அந்த மனம், சுவைக்கு யார் தான் மயங்கமாட்டாங்க. அப்படி டீ போடுவதில் கைதேர்ந்தவரான டோலி சாய்வாலாவிடம், தம்பி ஒரு டீ என தோரணையாக சொல்லி டீ வாங்கி குடித்துள்ளார் உலக பணக்காரர் பில் கேட்ஸ். மகாராஷ்டிராவின் நாக்பூரில் சாலையோரத்தில் டோலி சாய்வாலா டீக்கடையை நடத்தி வருகிறார். இவர் தனது தனித்துவமான ஸ்டைலில் டீ போடுவதன் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், இந்தியாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அப்போது, நாக்பூர் சென்ற அவர் டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார். இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம் என்றும் அதில் ஒன்று இந்த டீ தயாரிப்பு என்றும் பில்கேட்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Read Also; நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட அபராதம் திடீர் ரத்து- காரணம் இதுதான்!
பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். பில்கேட்ஸ்-ஐயே தனது டீக்கு ரசிகராக்கியதன் மூலம் ஒரே நாள் இரவில் டோலி சாய்வாலா உலக அளவில் பிரபலமாகியுள்ளார். அத்துடன், யார் இந்த டோலி சாய்வாலா என இணையத்தில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டீ தொழிலாக இருந்தாலும் அதை விரும்பி செய்தால், உலக பணக்காரர்களே உங்களது வாடிக்கையாளர் ஆவார்கள் என்பதை டோலி சாய்வாலா மெய்ப்பித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…