கூச்சிங்:
ரமலான் காலத்தில் முஸ்லிம்கள் நன்கொடை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், ஆனால் நன்கொடை வழங்க முன்னர் பெறுநர்களின் பின்னணியைச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மலேசியர்களின் பெருந்தன்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்பற்ற நபர்கள் பயனடைவதே இதற்குக் காரணம் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
அத்தகைய குழுக்களில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட பிச்சைக்காரக் கும்பலும் அடங்கும் என்று அவர் கூறினார்.
“மலேசியர்கள் பிச்சைக்காரர்களிடம் மிகவும் தாராள குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள், பலர் அத்தகைய கருணையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் பற்றி நாம் கேள்விப்படுபது ஒன்றும் புதிதல்ல, எனவே அனைவரும் சேர்ந்து அவர்களைத் தொடர்ந்து களையெடுப்போம் என்று அவர் சொன்னார்.
நன்கொடைப் பணம் சுரண்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அமலாக்க முயற்சிகளை சமூக நலத்துறை, நகர சபை, காவல்துறை மற்றும் குடிநுழைவுத் துறை ஆகிய துறைகள் மேற்கொண்டுவருவதாக நான்சி கூறினார்.