தேர்தல் பத்திர வழக்கில், ஸ்டேட் பாங்க் இந்தியாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய கெடு விதித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்ற விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும் படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் உள்ள கிளை வங்கிகள் மூலம் பெறப்பட்ட தேர்தல் பத்திரங்களை சேகரித்து சரிபார்க்க உள்ளதாகவும்,
இதற்காக ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி தரப்பில் முறையிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், சேகரித்த தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தான் கேட்பதாகவும், அதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது என்றும் கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர்.
ஆனால், தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை தவறாக இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் நன்கொடையாளர்கள் வங்கி மீது புகார் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் , மூன்று வாரங்கள் மட்டும் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:
பொன்முடி தண்டனை நிறுத்திவைப்பு – திருக்கோவிலூர் தொகுதி நிலைமை என்ன, அடுத்து என்ன நடக்கும்?
தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ. வழங்கிய உடன் அதை மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யாவிட்டால் எஸ்.பி.ஐ. வங்கி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…