இலங்கை வந்துள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதி பிரதமர் கொம் டபரன்சி, பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று முன்தினம் (07) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தாய்லாந்து வர்த்தகத் தூதுக் குழுவொன்றுடன் இணைந்தே தாய்லாந்தின் முன்னாள் பிரதி பிரதமர் கொம் டபரன்சி, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் சாத்தியமான முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இதன்போது அவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த தூதுக் குழுவில் வர்த்தகர்களான அட்டகோர்ன் மேன்சமுட், சாம்ரஸ் விஸ்வச்சாய்பன், ஏ.கே.ஏ.அஃப்ரீல் மற்றும் எல்.எம்.ஃபுர்ஹான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க மற்றும் ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
The post தாய்லாந்தின் முன்னாள் பிரதி பிரதமர் பிரதமர் தினேஷுடன் சந்திப்பு appeared first on Thinakaran.