கட்சிக்குள் ஒருவருக்கு சீட்டு வேண்டும் ஒருவருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என கூறுவது வாடிக்கையான ஒன்று.தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு,வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றை முதலில் வெளியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூற முடியாது.
தேசிய அளவில் பாஜக 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் கூறுவது ஆசை மட்டும் அல்ல பேராசையாகும். இந்தி பேசும் மாநிலங்களிலும், இந்துத்துவ மாநிலங்களிலும் பாஜக வளர்ந்துள்ளது. மற்றபடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதால் அக்கட்சி வளர்ந்து வருவதாக கருத முடியாது. தமிழகத்தில் திமுக -காங்.கூட்டணி பலமானது. இது அமோக வெற்றிபெறும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அக்கட்சி நிலை தெரியும் .