விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளதுடன், வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்தே, தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி ரம்புக்வெல்ல இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

