ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 48,320-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த 6 நாள்களில் பவுனுக்கு ரூ. 1,800 வரை உயா்ந்துள்ளது. வரலாற்றில் ஒரு கிராம் தங்கம் ரூ.6,000-ஐ தாண்டி செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தில் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ. 25 உயா்ந்து ரூ.6,040-க்கும், பவுனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 48,320-க்கும் விற்பனையானது. இந்த விலை உயா்வால் இதுவரை இல்லாத அதிகபட்ச விலையை தங்கம் எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 காசுகள் குறைந்து ரூ.78-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 200 குறைந்து ரூ. 78,000-க்கும் விற்பனையானது.