• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ட்ரம்பின் முகத்தை நாள்தோறும் பார்க்க முடியாது”.. நியூசிலாந்துக்கு குடிபெயரும் ஜேம்ஸ் கேமரூன்.. டிரம்ப் மீது அடுக்கடுக்காக புகார்!

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“ட்ரம்பின் முகத்தை நாள்தோறும் பார்க்க முடியாது”.. நியூசிலாந்துக்கு குடிபெயரும் ஜேம்ஸ் கேமரூன்.. டிரம்ப் மீது அடுக்கடுக்காக புகார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 01, 2025 10:06 AM IST

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், டிரம்பின் முகத்தை தினமும் பார்க்க முடியாது எனக் கூறி, அமெரிக்காவில் இருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்வதாக அறிவித்துள்ளார்.

News18News18
News18

டைட்டானிக், அவதார் உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு நிரந்திரமாக குடிபெயர்வதாக அறிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் முகத்தை நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்து  படங்களை மட்டுமே இயக்கி  50 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தவர் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கிய  டைட்டானிக் படம் 11 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. ஜேம்ஸ் கேமரூனின் அவதார், டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களும் உலகமெங்கும்  இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன.

கனடாவின் அன்டோரியோ மாகாணத்தில் பிறந்த ஜேம்ஸ் கேமரூன், தனது 17-வது வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அன்று முதல், ஹாலிவுட்  திரையுலகின் முன்னணி இயக்குநராக இருந்து வருகிறார்.  இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு  நிரந்திரமாக குடிபெயர்வதாக கேமரூன் அறிவித்துள்ளார். தனது திட்டம் குறித்து அவ்வப்போது பேசி வந்த கேமரூன். அவதார் திரைப்படங்களின் பணிகளை வெலிங்டனின் வெட்டா டிஜிட்டல் என்ற நிறுவனத்திலேயே செய்து வந்தார்.

இரண்டாவது முறையாக அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவருக்கு எதிரான பல கருத்துக்களை கேமரூன் கூறி வந்தார்.  தான் நியூசிலாந்துக்கு குடிபெயர டிரம்பே காரணம் என குறிப்பிட்டுள்ள கேமரூன், அமெரிக்காவில் எதுவுமே  ஒழுக்கமாக இல்லை எனவும், வரலாற்று ரீதியாக, எந்த பிரச்சனைகளுக்கு  நாடு குரல் கொடுத்ததோ, அது தற்போது இல்லை எனவும் கூறியுள்ளார்.

Also Read: “அமெரிக்காவில் வாழ்வது மகிழ்ச்சியாக இல்லை” – அமெரிக்கர்கள் கொடுத்த அதிர்ச்சி தரும் தகவல்கள்!

சிலர் பயன்பெற மட்டுமே, தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  அமெரிக்கா தற்போது பாதுகாப்பாக இல்லை என தான் உணர்வதாகவும், நாளிதழ்களில் முதல் பக்கத்தில் வெளியாகும் டிரம்பின் முகத்தை தினமும் பார்த்துகொண்டிருக்க முடியாது என்றும் காட்டமாக கூறியுள்ளார். தினமும் டிரம்பின் முகத்தை பார்ப்பது, ஒரு கார் விபத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை போன்றது என்றும் கேமரூன் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நியூசிலாந்துக்கு குடிபெயர்வது, தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக தான் ஏராளமான தியாகங்களை செய்துள்ளதாகவும் கேமரூன் கூறியுள்ளார். மிகப் பிரபலமான ஒருவர் டிரம்ப் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டை விட்டே வெளியேறுவது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஹாலிவுட்டிலிருந்து வெலிவுட்டுக்கு பயணிக்கும் கேமரூனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

First Published :

March 01, 2025 10:06 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“ட்ரம்பின் முகத்தை நாள்தோறும் பார்க்க முடியாது”.. நியூசிலாந்துக்கு குடிபெயரும் ஜேம்ஸ் கேமரூன்.. டிரம்ப் மீது அடுக்கடுக்காக புகார்!

Read More

Previous Post

“AI-ஆல் பணி இழப்பு ஏற்படாது…” – ஆகாஷ் அம்பானி சொன்ன கருத்து

Next Post

காஜாங் வட்டார இந்து சங்கத்தின் 40ஆம் ஆண்டு பொதுகூட்டம் | Makkal Osai

Next Post
காஜாங் வட்டார இந்து சங்கத்தின் 40ஆம் ஆண்டு பொதுகூட்டம் | Makkal Osai

காஜாங் வட்டார இந்து சங்கத்தின் 40ஆம் ஆண்டு பொதுகூட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin