மக்களவை தேர்தலையொட்டி டெல்லி, இமாசல பிரதேசம் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் நியூஸ் 18 குழுமம் மெகா கருத்து கணிப்பை மேற்கொண்டது.
மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் எண்ணங்களை துல்லியமாக பெறவும், அவர்களின் மனதை முழுமையாக அறிந்துகொள்ளவும் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. மக்களின் முடிவுக்கான காரணங்களை அறியவும், இந்த கருத்துக் கணிப்பை ஆழ்ந்த பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகள், முதலமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி அளித்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டது. வேட்பாளர் யாராக இருந்தாலும் மோடிக்காக பாஜகவுக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்தியாவின் அடுத்த பிரதமராக தகுதி உடையவர் யார் என்ற கேள்விக்கு, நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட வாய்ப்புகள் மக்கள் முன்பு கொடுக்கப்பட்டன. சமூக, மத நல்லிணக்கம், மணிப்பூர் சூழலை கையாண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மோடியின் செயல்பாடு எப்படி இருந்தது என்ற மதிப்பீட்டையும் மக்கள் முன்வைத்தனர். எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணி பாஜகவுக்கு நெருக்கடியை தருமா என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு, ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்டவை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என கேட்கப்பட்டது. ராமர் கோயில் திறப்பதற்கு முன்பாக தென்னிந்திய கோயில்களுக்கு பிரதமர் மோடி சென்றது குறித்த மக்களின் கருத்து பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்த மோடி, பல திட்டங்களை தொடங்கியது பாஜகவுக்கு ஆதரவை பெருக்குமா என்ற கோணத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.
காசி தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது போன்றவை தமிழ்நாட்டு மக்களின் மனங்களின் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அறியவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஒரு லட்சம் பேரை நேரில் சந்தித்து, அவர்களது எண்ண பிரதிபலிப்புகளை அறிந்த நியூஸ்18 குழுமம், அதன் முடிவுகளை இன்று மாலை 6 மணி முதல் வெளியிட்டு வருகிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான மெகா சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி 30 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ளது. 4 தொகுதிகளை அதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளது. 5 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு – மண்டலம் வாரியாக…
காவிரி டெல்டாவில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணியும் 1 தொகுதியில் பாஜக கூட்டணியும் 1 தொகுதியில் அதிமுக கூட்டணியும் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை உட்பட வடக்கு மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் 11 இடங்களில் திமுக கூட்டணியும் 2 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிமுகவுக்கு எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கில் உள்ள 10 தொகுதிகளில் 8ல் திமுக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளதாகவும் பாஜக கூட்டணிக்கு எந்த தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் அதிமுக 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காவிரி டெல்டாவில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணியும் 1 தொகுதியில் பாஜக கூட்டணியும் 1 தொகுதியில் அதிமுக கூட்டணியும் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை உட்பட வடக்கு மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் 11 இடங்களில் திமுக கூட்டணியும் 2 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிமுகவுக்கு எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கில் உள்ள 10 தொகுதிகளில் 8ல் திமுக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளதாகவும் பாஜக கூட்டணிக்கு எந்த தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் அதிமுக 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
டெல்லி மாநில முடிவுகள்-
டெல்லியில் சாந்தினி சௌக், கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடகிழக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி (SC), தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி என மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2024 மக்களவை தேர்தலில் 58 சதவீத வாக்குகளும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 3 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி 2014 இல் 46.40% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 2019 இல் வாக்கு சதவீதம் 56.86% ஆக உயர்ந்தது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடும்.
அரியானா
அரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அங்குள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த கூட்டணிக்கு 62 சதவீத வாக்குகளும், எதிர்க் கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 29 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், ரோஹ்தக், சோனிபட், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பிவானி-மகேந்திரகர் என இங்கு மொத்தம் 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019 இல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2024 மக்களவை தேர்தலில் 62 சதவீத வாக்குகளும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு 29 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் பாஜக தற்போது 6 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் கர்னால் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் போட்டியிடுகிறார்.
பிகார்
பிகாரில் 40 நாடாளுமன்ற தொகுதிக்கான மெகா சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 38 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 58 சதவிகித வாக்குகளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 28 சதவிகித வாக்குகளையும் மற்றவர்கள் 13 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
கேரளா
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 14 இடங்களிலும், பாஜக தலைமையிலான கூட்டணி 2 தொகுதிகளிலும், இடது சாரிகள் கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
வாக்கு சதவீதத்தை பொருத்தளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 18 சதவீத வாக்குகளும், இடதுசாரி கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம்
29 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 28 தொகுதிகளை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. இந்தியா கூட்டணி 1 தொகுதியில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 55 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 38 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 7 சதவீத வாக்குகளும் கிடைக்க கூடும்.
பஞ்சாப்
13 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களும் 38 சதவித வாக்குகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3 தொகுதிகளும் 13 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 1 இடமும் 15 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இமாச்சல பிரதேசம்
4 மக்களவை தொகுதிகளை மட்டுமே கொண்ட இமாசல பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கூட்டணிக்கு 67 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 27 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்
80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் கூட்டணிக்கு இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பு ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் இங்கு மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி 57 சதவீத வாக்குகளுடன் 77 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 26 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறக் கூடும். மற்ற கட்சிகள் கூட்டணிகள் 8 சதவீத வாக்குகளை பெறலாம் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…