ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் திறந்தவெளியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து காரணமாக துருப்பிடித்த மோட்டார் ஷெல் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரவு சுமார் 8.15 மணியளவில் காரா மதனா கிராமத்தில் சில விவசாயிகள் வயலில் பயிர் கழிவுகளை எரித்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து காரணமாக துருப்பிடித்த மோட்டார் ஷெல் வெடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் வயல்களில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.