சென்னை: தங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும் விற்பனையானது.
வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கும் விற்பனையானது.