காஜாங்:
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காவல்துறை நடத்திய தொடர் சோதனையில் RM14.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 33 மற்றும் 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், ஆணையர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.
“கைது செய்யப்பட்ட இருவரும் டிரான்ஸ்போர்ட்டர் மற்றும் ஸ்டோர் கீப்பராக வேலை செய்துவருகின்றனர் என்றும், அவர்களுக்கு ஒவ்வொரு வேலைக்கும் RM2,000 முதல் RM3,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அவர்களிடமிருந்து “14.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 332.443 கிலோ சியாபு, 6.07 கிலோ எம்.டி.எம்.ஏ பவுடர், 8.1 கிலோ எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் 15.7 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகளை நாங்கள் பறிமுதல் செய்தோம்,” என்று அவர் இன்று (மார்ச் 21) காஜாங் போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த சோதனையில் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தக் கும்பல் உள்ளூர் சந்தை மற்றும் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
“அவர்கள் கொரியர் மூலம் அண்டை நாடுகளுக்கு போதைமருந்துகளை அனுப்புகிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று, அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 1.8 மில்லியன் போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்று காம் காவ் மேலும் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மார்ச் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம் காவ் தெரிவித்தார்.