‘சிறுவர்களுக்கான படப் புத்தகத்தை உருவாக்குதல்’ தொடர்பான பயிற்சி முகாம் -2024 சிறுவர் புத்தகங்களுக்கான தேசிய கூட்டமைப்பால் மிக விரைவில் நடத்தப்படவுள்ளது.
கல்வி வெளியீடுகளுக்கான ஆலோசனை சபை, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை றூம் டு றீட் நிறுவனம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படவுள்ள இப்பயிற்சி முகாமில் பங்குபற்ற விருப்பமுடையவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
storysi@RoomtoRead.onmicrosoft.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாகவோ, 0771539031 மற்றும் 766910602 எனும் வட்ஸ்அப் இலக்கத்தினூடாகவோ அல்லது 0768254721 எனும் கையடக்கத் தொலைபேசியினூடாகவோ தம்முடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
The post ‘சிறுவர்களுக்கான படப் புத்தகத்தை உருவாக்குதல்’ பயிற்சி முகாம் -2024 appeared first on Thinakaran.