சிங்கப்பூரில் பணிபுரிந்த தந்தை, மணமகன் வீட்டில் கேட்ட வரதச்சனையை கஷ்டப்பட்டு சம்பாதித்து போட்டுக்கொடுத்து தன் மகளை திருமணம் முடித்து கொடுத்தார்.
ஆனால், 9 மாத கர்ப்பிணியான அந்த பெண் வரதட்சிணை கொடுமையால் எரித்துக்கொள்ளப்பட்ட செய்தியை அறிந்து உடைந்து அங்கேயே விழுந்தார் ஊழியர்.
குடிபோதையில் கார்களை அடித்து தும்சம் செய்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்- நீலாவதி தம்பதியினர், வெங்கடேசன் சிங்கப்பூரில் பணியாற்றியவர்.
இந்த தம்பதியின் மகள் நிர்மலா. இவரை புகழேந்தி என்ற மணமகனுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் முடித்து கொடுத்தனர்.
இரு வீட்டு சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் 7 பவுன் வரதச்சனை நகை பாக்கி இருந்துள்ளது. இதற்காக நிர்மலா அடிக்கடி துன்புறுத்தப்பட்டுள்ளார்.
எந்தளவுக்கு என்றால், ஊசியை வைத்து குத்தி குத்தி நிறைமாத கர்ப்பிணியை துன்புறுத்தியுள்ளனர் அந்த இரக்கமற்ற மிருகங்கள்.
வெங்கடேசன் சிங்கப்பூரில் இருந்து வந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், மணமகன் புகழேந்தி மற்றும் அவரின் தாய், 7 பவுன் பாக்கியை கொடுத்து விட்டு பெண்ணை கூட்டி செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் என்னசெய்வது என்றறியா நின்ற ஏழை தந்தை, அங்கும் இங்கும் கடனை வாங்கி ஏற்பாடு செய்துகொண்டு இருக்கையில், வெங்கடேசனுக்கு கால் வந்துள்ளது. அதில் உங்க பெண் எரிந்த நிலையில் கிடக்கிறார் என்று.
ஒன்றுமறியா உடைந்துபோன வெங்கடேசன் தலைதெறிக்க ஊர் மக்களுடன் புகழேந்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே தீ காயங்களுடன் நிர்மலா கிடக்க, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், 9 மாத குழந்தையும் நிர்மலாவும் தீக் காயங்களுக்கு ஆளாகி இறந்தது பின்னர் உறுதியானது. இந்நிலையில் புகழேந்தி மற்றும் அவரின் தாயாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் வரதச்சனை கேட்டு தொந்தரவு செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர்களும் சில உறவினர்களும் என் மகளை அடித்து கொலை செய்து எரித்துள்ளனர் என்று தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.
எனது மகளை துடி துடிக்க கொன்ற புகழேந்திக்கு தூக்குத் தண்டனையும், அவரின் தாயாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் அவர்.
அப்போதுதான் எரித்துக்கொள்ளப்பட்ட என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், இனி எங்கும் வரதட்சணை கொடுமை நடக்கக் கூடாது என்றும் கண்ணீர் வடித்தார் தந்தை.
“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர