கோத்தா கினாபாலு:
சாபி தீவில் சீன சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் 51 வயதான ஜூ சுங் குவாங் என அடையாளம் காணப்பட்டார், ஏனைய சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று, கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஜைதி அப்துல்லா கூறினார்.
பாதிக்கப்பட்ட நபரும் அவரது மனைவியும் காலை 10 மணியளவில் சுற்றுலாப் படகு மூலம் தீவிற்குள் நுழைந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
பாதிக்கப்பட்டவரை கரைக்கு கொண்டு வந்த பின்னர், உயிர்ப்பிழைக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ராணி எலிசபெத் 1 மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாக ஏசிபி முகமட் ஜைதி கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.