டிசெம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் உயர்வினை ஆராய்ந்து மாதாந்த எரிவாயு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3565 ரூபாயாக மாற்றமின்றி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|